×

கமல்ஹாசன் கொடுத்த பரிசு: ஹாலிவுட் நடிகை பூரிப்பு

ஹாலிவுட்டின் பிரபல மேக்அப் மேன் மைக்கேல் வெஸ்ட்மோர். இவர், கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி, தசாவதாரம் படங்களுக்கு மேக்அப் கலைஞராக பணியாற்றினார்.
இந்த படங்களில் கமல்ஹாசனின் வித்தியாச தோற்றங்களுக்கு இவர்தான் முக்கிய காரணம். இவரது மகள், மெக்கன்ஸி வெஸ்ட்மோர். ஹாலிவுட் பட நடிகை. சமீபத்தில் இவர் கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளார். இது பற்றி தனது டிவிட்டரில் கூறும்போது, ‘நான் சிறுமியாக இருந்தபோது, கமல்ஹாசனின் படங்களில் பணியாற்ற அப்பா செல்வார். அப்போது கமல் எனக்கு உடை ஒன்றை அன்பளிப்பாக தந்தார். அது மறக்க முடியாத பரிசு. அந்த உடையில்தான் இந்த புகைப்படத்தில் இருக்கிறேன்’ என சிறு வயது போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார். பல வருடங்களுக்கு முன் கமல் கொடுத்த பரிசை நினைத்து இப்போதும் பெருமையாக நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Kamal Haasan ,actress boom ,Hollywood , Kamal Haasan, Hollywood actress
× RELATED காவல்துறை மீதான புகார்களை விசாரிக்க...