×

காவல்துறை நடத்தும் குறும்பட போட்டிக்கு நடுவரான பெண் இயக்குனர்

பூவரசம் பீ பீ, சில்லுகருப்பட்டி படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஹலீதா ஷமீம். தற்போது ஏலே என்ற படத்தை இயக்கி வருகிறார். கொரோனா கால ஊரடங்கில் தனிமையில் இருக்கும் அவருக்கு தமிழ்நாடு காவல்துறை நடுவர் பொறுப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாடு காவல் துறை ‘சமூக விழிப்புணர்வு’’ என்ற தலைப்பில் ஒரு குறும்பட போட்டியை நடத்துகிறது. இந்த போட்டிக்கு வரும் குறும்படங்களில் சிறந்த படத்தை தேர்வு செய்து தரும் நடுவர் பொறுப்பை ஹலீதா ஷமீமுக்கு வழங்கி உள்ளது. இதனை காவல்துறை தனது அதிகாரபூர்வ டிவிட்டரில் அறிவித்துள்ளது. அதற்கு  ஹலீதா ஷமீம் “காவல்துறை எனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்வேன். என்னை நம்பி கொடுத்த பொறுப்புக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.


Tags : police short film competition , Police, Arbitrator, Female Director
× RELATED தேர்வுத்துறை இயக்குநர் பொறுப்பேற்பு