×

பணி நிரவல் பணியாளர்களை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மீண்டும் பணியமர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை 2013ல் தமிழக அரசே எடுத்துக் கொண்டது. அளவுக்கு அதிகமான பணியாளர்களும், ஆசிரியர்களும் இருப்பது தான் நிதி நெருக்கடிக்கு காரணம் என்றும், அவர்களை பிற அரசுத் துறைகளுக்கு பணி நிரவல் செய்யலாம் என்றும் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய சிவதாஸ் மீனா அரசுக்கு பரிந்துரைத்தார்.  அதன்படி,  2017ம் ஆண்டு பணிநிரவல் செய்யப்பட்ட 3600 பணியாளர்களில் 2040 பேரின் பணி நிரவல் ஒப்பந்த காலம் கடந்த 17ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. ஆனால், அவர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலையில் பணியமர்த்த பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துவிட்டது.

கடந்த 3 ஆண்டுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு, பணி நிரவல் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, பின்னர் 3 ஆண்டுகள் பணி நிரவல்  காலத்தில் பிற அரசு நிறுவனங்களில் பணியாற்றி முடித்த 2040 சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு உடனடியாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி வழங்க வேண்டும். பணி நிரவல் காலத்தில் அவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதவிஉயர்வு உள்ளிட்ட உரிமைகளையும் வழங்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Annamalai University ,Ramadas Annamalai University , Corona, Curfew, Staff Annamalai University, Ramadas
× RELATED சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியீடு..!!