×

அதி தீவிரமாக கரையை கடந்தது 'அம்பன்'...! நாளை காலை காற்றின் வேகம் இயல்பு நிலைக்கு திரும்பும்: வானிலை மையம் அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேச எல்லைக்கு அம்பன் புயல் நகர்ந்தது. அம்பன் புயல் கடந்த 6 மணி நேரமாக 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது. நாளை காலை 11.30 மணிக்கு பிறகு காற்றின் வேகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் உருவான அம்பன் புயல், சூப்பர் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரத் தொடங்கியது. நேற்று மேற்கு வங்காள கடற்பகுதியை நெருங்கியபோது அதி தீவிர புயலாக வலுவிழந்தது. இன்று காலையில் ஒரிசாவின் பாரதீப் பகுதியில் இருந்து 125 கிமீ தொலைவில், வடமேற்கு வங்கக்கடலில் புயல் மையம் கொண்டிருந்தது.

புயல் மேலும் வலுவிழந்து இன்று மதியம் அல்லது மாலையில் மேற்கு வங்காளத்தின் சாகர் தீவுகள் மற்றும் வங்காளதேசத்தின் ஹதியா தீவுகள் இடையே கரை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த புயல் காரணமாக ஒரிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஒரிசாவின் பாரதீப் பகுதியில் மணிக்கு 82 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது. பலசோர் மாவட்டம் சந்திபூர் கடலோர பகுதிகளிலும் கடும் சூறைக்காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புயல் தாக்கும் பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். அண்டை மாநிலமான ஒரிசாவின் கடலோர பகுதிகளிலும் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் இதனால் பாதிப்புக்குள்ளாவார்கள் என்ற நிலையில் மேற்குவங்கத்தில் 3 லட்சம் பேரும், ஒரிசாவில் 1.3 லட்சம் பேரும் பாதிப்பு பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வங்கதேசத்தில் சுமார் 2 கோடி பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று இரவில் கோல்கத்தாவுக்கு தென் கிழக்கே, 400 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது.

இன்று புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தின் பல பகுதிகள் சேதமடைந்ததாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்பான் புயல் காரணமாக, வங்கக் கடலில் அலைகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட்டன. மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேச எல்லைக்கு புயல் நகர்ந்தது. அம்பன் புயல் கடந்த 6 மணி நேரமாக 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது. நாளை காலை 11.30 மணிக்கு பிறகு காற்றின் வேகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Weather Center , Ambon, Speed, Weather Center
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3...