×

பொருளாதார மந்தநிலையால் இந்தியாவில் இருந்து ரூ.1,25,000 கோடி வெளிநாட்டு தொழில் முதலீடு திரும்பப் பெறப்பட்டது : முதலீட்டாளர்கள் கவலை

சென்னை :  பொருளாதார மந்தநிலை எதிரொலியாக இந்தியாவில் இருந்து ரூ.1,25,000 கோடி அளவுக்கு வெளிநாட்டு தொழில் முதலீடு திரும்பப் பெறப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களால்  வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சம் அடைந்தனர்.இதனால் இந்தியா போன்ற வளர்ந்த வரும் நாடுகளின் பங்கு சந்தைகளில் இருந்து குறிப்பிட்ட அளவு முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றன.

இந்திய பொருளாதாரம் சந்தித்து வரும் வீழ்ச்சிகளை இதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்த நிலையில் தான், இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவு திரும்பப் பெறப்பட்டதை அமெரிக்க ஆய்வு நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்திய தொழில்துறையில் முதலீடு செய்யப்பட்டு இருந்த ரூ.1,25,000 கோடி திரும்பப் பெறப்பட்டு உள்ளது. வாஷிங்டனில் உள்ள ஐசிஆர்சி எனப்படும்  தனியார் பொருளாதார ஆய்வு மையம் இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைய தொடங்கும் போது, மீண்டும் வெளிநாட்டினரின் முதலீடுகள் அதிகரிக்கும் என்று ஐசிஆர்சி தெரிவித்து இருக்கிறது.


Tags : India ,investors ,recession ,withdrawal , Economy, recession, India, Rs 1,25,000 crore, foreign, industry, investment, investors, concern
× RELATED இந்தியாவில் ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா உறுதி