×

சீனாவின் விஷம பின்னணி: இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளை தனது பகுதிகளாக குறிப்பிட்டு வரைபடம் வெளியிட்ட நேபாளம்!!

காத்மாண்டு : இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளை தனக்கு சொந்தமானதாக குறிப்பிட்டு நேபாளம்  வெளியிட்டு உள்ள வரைபடத்தால் இரு நாட்டு தூதரக உறவுகளில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நேபாள அரசாங்கம் இன்று அந்நாட்டின் புதிய, சர்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டது, இதில் இந்தியாவில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் காலாபானி,லிம்பியாதுரா, லிபுலேக் போன்ற பகுதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வரைபடத்தை நில மேலாண்மை, கூட்டுறவு மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகம் வெளியிட்டது.

வடக்கு எல்லையில் இந்தியாவின் ஆதிக்கத்தை குறைக்க நினைக்கும் சீனாவின் விஷமம் இதன் பின்னணியில் இருப்பதாக நம்பப்படுகிறது.  லிபுலேக்கில் இருந்து மானசரோவருக்கு 80 கிலோ மீட்டர் நீளத்தில் இந்தியா சாலை அமைத்த போதும் நேபாளம் ஆட்சேபனை எழுப்பியது.உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட சாலைப் பிரிவு முற்றிலும் இந்தியாவின் எல்லைக்குள் உள்ளது என்று நேபாளத்திற்கு இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. முன்னதாக இந்தியாவுக்கு சொந்தமான பகுதியாக இருந்தாலும் நாங்க ஓயமாட்டோம், எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்குவோம் என்று நேபாள நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்து இருந்தது கவனிக்கத்தக்கது.


Tags : China ,Nepal ,territories ,India , China, Poison, Background, India, Owned, Areas, Map, Nepal
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்