×

இந்தியாவுக்கு சொந்தமான பகுதியாக இருந்தாலும் நாங்க ஓயமாட்டோம், எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்குவோம் : நேபாள பிரதமர் அறிவிப்பு

நேபாளம் : இந்தியாவுக்கு சொந்தமான பகுதியாக இருந்தாலும் நாங்க ஓயமாட்டோம், எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்குவோம் என நேபாள நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். நேபாளம் தனது புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்நாட்டின் அமைச்சரவைக் குழுவிடம் ஒப்புதல் பெற்றுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் காலாபானி,லிம்பியாதுரா, லிபுலேக் போன்ற பகுதிகள் இடம் பெற்றுள்ளது. சீனக் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலாக இருக்கும் லிபுலேக் கணவாய்க்கு செல்லும் எல்லையோர சாலை ஒன்றை இந்தியா தொடங்கிய 10 நாட்களுக்குப் பின்னர் நேபாள அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த சாலையை இந்தியா திறந்ததற்கு நேபாள வெளியுறவுத்துறை கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. 335 கி.மீ., பரப்புள்ள நிலத்தை இரு நாடுகளும் உரிமை கொண்டாடி, தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சர்ச்சைக்குரிய நிலங்கள் அடங்கிய, புதிய தேசிய வரைபடத்தை வெளியிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.  அப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய நேபாள பிரதமர் ஒலி,  “ ராஜ்ய ரீதியில் அந்தப்பகுதிகளை மீண்டும் பெறும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.  இந்தப்பிரச்சினை ஓயும் வரை மங்கிப்போகாது. இந்த விவகாரத்தில் யார் வருத்தம் அடைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எந்த விலை கொடுத்தாவது அந்தப்பகுதிகளை மீட்போம்” என்றார்.


Tags : Nepal ,India , India, Owned, Area, Price, Nepal, Prime Minister, Announcement
× RELATED கோவாவில் தங்கியிருந்த நேபாள மேயரின் மகள் மாயம்