×

ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு பேருந்து வசதி,தெர்மல் சோதனை..: நிபந்தனைகளுடன் பொதுத் தேர்வை நடத்தி கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி

டெல்லி : நாடு முழுவதும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்திக் கொள்ள  மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 4ம் கட்டம் ஊரடங்கு மே 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுவதில் சிக்கல் நிலவி வந்தது. பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக பல மாநிலங்களில் இருந்து கோரிக்கை வந்ததை அடுத்தும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாநில அரசுகள் நடத்திக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில்

*கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கக்கூடாது.

*தேர்வு பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

*தெர்மல் சோதனை, சானிடைசர், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.

*தேர்வு மையங்களுக்கு செல்லும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்

*ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்ய வேண்டும், அதன் பின்னர் தான் தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்க வேண்டும்.

*கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களிலும் தேர்வு நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Bus Facilitation for Teachers ,Thermal Testing Central ,states , Teachers, Students, Bus, Thermal Testing, Conditions, General Selection, States Central Government, Permission
× RELATED 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம்...