×

ஊரடங்கு தளர்த்தப்படாத போது சுங்கச்சாவடி திறப்பு ஏன்?.. கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

பரனூர்: செங்கல்பட்டு மாவட்டம் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகள் முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுவது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்களில் ஒன்றான செங்கல்பட்டு மாவட்டத்தில் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. முன்னறிவிப்பின்றி சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அத்தியாவசிய வாகனங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது. சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை எற வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பரனூர் சுங்கச்சாவடி ஜனவரி மாதம் அடித்து நொறுக்கப்பட்ட பிறகு கடந்த 4 மாதங்களாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : activists , Curfews, customs, social activists, protest
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...