×

ஆம்பன் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் மேற்கு வங்கம், ஒடிசா: பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு படையினர் குவிப்பு

புவனேஸ்வர்: அதிக சேதத்தை விளைவிக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ள ஆம்பன் புயல் இன்று கரையை கடப்பதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் அதிவேகத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் ஆபத்தான புயலான உருவெடுத்துள்ள ஆம்பன் ஒடிசாவுக்கும் மேற்கு வங்கத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் கடற்கரை மாவட்டமான பட்ராக்கில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தின் கிழக்கு பட்நாபுரில் கடல் நீர் ஊருக்குள் வராமல் இருக்க மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்து. மேலும் தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வீடுகளிலும் புயல் தடுப்பு மற்றும் தற்காப்பு உபகரணங்களை தயாராக வைத்திருக்குமாறு பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆம்பன் புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 19 மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் அதிக சேதத்தை தங்கலாம் என கணிக்கப்பட்டுள்ள தெற்கு பர்கானா மாவட்டத்தில் 6 மீட்பு படைகள் தயாராக உள்ளன.


Tags : West Bengal ,Rescue Squadron Focus West Bengal , ஆம்பன் புயல் மேற்கு வங்கம், ஒடிசா, பேரிடர் மேலாண்மை, மீட்பு படை
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!