×

பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு வைக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை : கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை : பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு வைக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் எச்சரித்துள்ளது. கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு அமலில் உள்ளதால் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி ஆக்கப்படுவோர் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பள்ளிகள் திறந்ததும் 9ம் வகுப்பு வரை தேர்வு வைக்க சில தனியார் பள்ளிகள் ரகசியமாக திட்டமிட்டுள்ளன. இதற்கான குறுஞ்செய்திகளை பெற்றோர்களுக்கு சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் அனுப்பி வவருகின்றன.

ஆனால் மாணவர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே பள்ளி ஆசிரியர்கள் நாளை பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1ம் தேதி அறிவிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் தேர்வு ஜூன் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு மே 26ம் தேதி முதல் பள்ளிகளுக்கு வந்தால் போதுமானது என்று கல்வித்துறை கூறியுள்ளது.


Tags : schools ,Private Schools , Schools, students, electives, private schools, heavy, action, academia, warning
× RELATED மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக...