×

கொரோனாவை பயன்படுத்தி புதிய இணையதள வைரஸ் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் நவீன தொழில்நுட்ப மோசடி : சி.பி.ஐ. எச்சரிக்கை

டெல்லி :  கொரோனா வைரஸ் தொற்றுநோயை பயன்படுத்தி, வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடும்   நவீன தொழில்நுட்ப மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக சி.பி.ஐ. எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்டர்போல் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சி.பி.ஐ, அனைத்து மாநில அரசுகளுக்கும், வங்கிகளுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த அறிவிப்பில்
 
கொரோனா தொற்று தொடர்பான விபரங்களைப் பெற குறிப்பிட்ட லிங்கை பதிவிறக்கும் செய்யும்படி பொதுமக்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.

*குறிப்பிட்ட லிங்கை பதிவிறக்கம் செய்தால், கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கு உங்கள் வங்கி கணக்கில் ஒரு பெரிய தொகை செலுத்தப்படும் என்பது போன்று கவர்ந்திழுக்கிற வகையில் ஆசையை தூண்டும் வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் உண்மையில் அது வாடிக்கையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மோசடி சாப்ட்வேர் ஆகும்.

*அந்த லிங்கை பதிவிறக்கம் செய்தால் அதில் மறைந்துள்ள  ‘செர்பரஸ் ட்ரோஜன்’ ((Cerberus Trojan)) எனும் இணையதள வைரஸ், கணினி அல்லது செல்போனில் புகுந்து கொள்ளும்.

*பிறகு அந்த ஸ்மார்ட் போன் கட்டுப்பாடு, எஸ்.எம்.எஸ். அனுப்பிய மோசடி நபரின் கைக்கு சென்று விடும்.

*அதைக் கொண்டு வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரி, வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு கிரெடிட் கார்டு எண், டெபிட் கார்டு எண் உள்ளிட்ட அனைத்து ரகசிய தகவல்களையும் அவர்கள் எளிதாக திருட முடியும்.

*பின்னர் அதனைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆகவே கொரோனா பெயரில் வரும் நம்பகத்தன்மை இல்லாத லிங்க் /செயலிகளை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யக்கூடாது,என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

இது சர்வதேச அளவில் இப்போது பரவி வருவதாக ‘இன்டர்போல்’ (சர்வதேச போலீஸ் அமைப்பு) எச்சரித்துள்ளது. அதன்பேரில் மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும், போலீஸ் துறையினரையும் சி.பி.ஐ. உஷார்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona , Corona, New Internet, Virus, Bank Account, Money, Stealing, Modern, Technology, Fraud, CPI, Alert
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...