×

பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு காமு சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக சீனுவாசன் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் 30ம் தேதி, பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டில், பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கைக்கு, தலைமை ஆசிரியர் சீனுவாசன், நன்கொடை பெற்றதாக தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு புகார் வந்தது.அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், தலைமை ஆசிரியர் சீனுவாசனை கடந்த சில நாட்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்தனர். ஏப்ரல் 30ம் தேதி பணி ஓய்வு பெற இருந்த அவர், ஒரு சில நாட்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : School Headmaster , School Headmaster Suspend
× RELATED அரசு பள்ளி தலைமையாசிரியரை கண்டித்து...