×

சொந்த ஊருக்கு நடந்து சென்றபோது பசியால் வடமாநில வாலிபர் பரிதாப பலி

கும்மிடிப்பூண்டி: சென்னையில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது ஊரடங்கு காரணமாக இவர்கள், வேலை இழந்து வருமானமின்றி தவிப்பதால் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவெடித்தனர். அதன்படி கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையை ஒட்டியுள்ள சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்தும், சைக்கிள்களிலும் பயணித்து வருகின்றனர். அவ்வாறு செல்பவர்களை தமிழக - ஆந்திர எல்லையான பனங்காடு பகுதியில் ஆந்திர போலீசார் வரவிடாமல் தடுத்து நிறுத்தியும் தடியடி நடத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை போரூரில் கட்டுமான தொழில் செய்து வந்த வடமாநில இளைஞர் ஒருவர், சொந்த ஊருக்கு நடந்து செல்ல முடிவெடித்து நேற்று அதிகாலை புறப்பட்டார். கவரப்பேட்டை பஜார் பகுதியில் நடந்து வந்தபோது, பசியால் திடீரென அவர் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை எழுப்பி உணவு கொடுக்க முற்பட்டனர். அப்போது, அவரது உடலில் எந்தவித அசைவும் இல்லாததால் மருத்துவரை அழைத்து வந்து பார்த்தனர்.

பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே  இறந்து விட்டதாக தெரிவித்தார். தகவலறிந்த கவரைப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராம்திவாஸ் (44) என்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : mourner ,Northland ,home , North of the state of the young men, killed, Corona, curfew
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...