×

ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா

திருவள்ளூர்: திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, பல்ப் உட்பட பல்வேறு மின்சாதன பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து, திருவள்ளூரில் விற்பனை செய்து வந்த வியாபாரி ஒருவர் சத்யமூர்த்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் நெருங்கி பழகியவர்கள் என 20க்கும் மேற்பட்டவர்களை சுகாதார துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

இதில், ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்த வியாபாரியின் மனைவி உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது நேற்று உறுதியானது. இதனைத்தொடர்ந்து 6 பேரையும் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதனால் சத்யமூர்த்தி தெரு முழுவதும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. மேலும், நகராட்சி அதிகாரிகள் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.Tags : Corona , The only family, Corona
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 532,861 பேர் பலி