×

ரஜினி பட வில்லனிடம் விவாகரத்து கேட்ட மனைவி

பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், ஏராளமான இந்திப் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது அவருக்கு மனைவி ஆலியா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாலிவுட் படவுலகினரை மட்டுமின்றி, ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நோட்டீஸ் அனுப்பியதற்கு சரியான காரணம் கூறப்படாத நிலையில், மனைவி அனுப்பிய நோட்டீசுக்கு இதுவரை நவாசுதீன் தரப்பில் இருந்து உரிய பதில் அளிக்கப்படவில்லை என்கிறார்கள். இதையடுத்து ஆவேசம் அடைந்த ஆலியா, நோட்டீஸ் அனுப்பிய நாளில் இருந்து 15 நாட்களுக்குள் உரிய பதில் வரவில்லை என்றால், நவாசுதீன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளாராம். இந்த விவகாரம் இந்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Rajini ,film villain ,movie villain , Rajini film villain, wife
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...