×

பத்திரிகை துறையை பாதுகாக்க வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்

சென்னை: பத்திரிகை துறையை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மதிமுக பொதுசெயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
மதிமுக பொதுசெயலாளர் வைகோவை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இந்து குழும இயக்குநர் என்.ராம், தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தினமலர் கோவை மதிப்பு வெளியீட்டாளர் ஆதிமூலம் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, தற்போது பத்திரிகைத் துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை விவரித்து அவர்கள் கையொப்பமிட்ட கடிதத்தை கொடுத்தனர். மேலும், பத்திரிகைத் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை விளக்கினர்.

அதன் அடிப்படையில், ‘‘அச்சுக் காகிதங்கள் மீதான சுங்க வரியை நீக்க வேண்டும். நாளிதழ்களுக்கு அரசுகளிடமிருந்து வரவேண்டிய விளம்பரக் கட்டண பாக்கிகளை உடனுக்குடன் கொடுக்க உத்தரவிட வேண்டும். அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்’’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பின்னர், உங்கள் கோரிக்கைகள் முழுக்க முழுக்க நியாயமானவை. இதற்காக பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்புகிறேன் என்று வைகோ உறுதி அளித்தார்.

அதன்பேரில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி பிரதமருக்கு ஒரு கடிதத்தை மின்னஞ்சல் மூலமாக அனுப்பினார். அதேபோல, தொடர்ந்து ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்தித்து வலியுறுத்த பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.


Tags : Vaiko ,Defense , Letter to the Press Department, Prime Minister,Vaiko
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...