×

ஆந்திராவில் ஆக.3ல் பள்ளிகள் திறப்பு

அமராவதி: ஆந்திராவில் வரும் ஆகஸ்டு 3ம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நேற்று அவரது இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘ஆந்திராவில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும். எனினும், வர்த்தக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றைத் திறப்பதற்கான தடை தொடரும். கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில், கடைகள் மீண்டும் திறக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.

Tags : Schools ,Andhra Pradesh Schools ,Andhra Pradesh , Schools, Andhra Pradesh
× RELATED ஊரடங்கால் மாதக்கணக்கில் பள்ளிகள்...