×

ஊரடங்கு உத்தரவை மீறி இயக்கியதாக சென்னையில் 4 ஆயிரம் ஆட்டோக்கள் பறிமுதல்: பத்து நாளில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

சென்னை: ஊரடங்கு உத்தரவின்போது சென்னை மாநகரம் முழுவதும் கடந்த 10 நாட்களில் இயக்கப்பட்ட 4 ஆயிரம் ஆட்டோக்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக சென்னை உட்பட மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுபோக்குவரத்தில் ஒன்றான ஆட்டோ இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.   ஆனால் அரசு உத்தரவை மீறி சென்னை மாநகரம் முழுவதும்  ஆட்டோக்கள் வழக்கமான நாட்களில் ஓடுவது போல் இயங்கி வந்தது. சமூக இடைவெளி இல்லாமல் கூடுதலான ஆட்களையும் ஏற்றி வந்தனர்.

 இதையடுத்து மாநகர  போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவுப்படி அரசு உத்தரவை மீறி இயக்கப்பட்டு வரும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார்.  அதை தொடர்ந்து நேற்று  144 தடை உத்தரவை மீறி பொதுப்போக்குவரத்து வாகனம் இயக்கியதாக கடந்த 10 நாளில் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 3,969 ஆட்டோக்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு  500 அபராதம் விதித்துள்ளனர். குறிப்பாக கடந்த 14ம் தேதி முதல் நேற்று வரை சராசரியாக நாள் ஒன்றுக்கு 600 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Chennai , Curfew, Chennai, Autos confiscation, Traffic police
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...