×

மே 22ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: தொமுச அறிவிப்பு

சென்னை: மத்திய - மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து மே 22 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். இதுகுறித்து தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் தாங்கள் பணி செய்யும் இடங்களில் 5 பேருக்கு மிகாமல் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு, தனியார் மயமாக்குதலை கண்டித்தும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசை எதிர்த்தும் பதாகைகளை ஏந்தி, கருப்புக் கொடியுடன் 22ம் தேதி காலை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 144 தடை உத்தரவால் பெரும்பாலான தொழிலாளர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலோ அல்லது பணி செய்யும் இடத்திலோ சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Protest ,tomuca announcement , protest
× RELATED அர்ஜெண்டினாவில்...