×

மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதற்கிடையே ஊரடங்கு நேரத்தில் சென்னை மாநகரில் குறிப்பாக வடசென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் மாலை நேரங்களில் ஏராளமானோர் பட்டம் விடும் சம்பவம் தொடந்து வருகிறது. இதனால், ஆங்காங்கே பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் மாஞ்சா நூல் தயாரிப்பு மற்றும் மாஞ்சா நூலில் பட்டம் விட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி  மாஞ்சா நூல் மற்றும் பட்டம் தயாரிக்கும் நபர்கள், பட்டம் விடும் நபர்கள் அனைவரையும் கைது செய்து, அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடசென்னையில் சில இடங்களில் ஆன்லைனில் பட்டம் வாங்கி ரகசியமாக விற்பனை செய்வதாக தகவல் வந்தள்ளது. அப்படி ரகசியமாக பட்டம் மற்றும் மாஞ்சா நூல் விறப்னை செய்தால் சம்பந்தப்பட்ட நபரும் கைது செய்யப்படுவார் என்றும், பட்டம் விடும் நபர்கள் மற்றும் தயாரிக்கும் நபர்கள்  குறித்து அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தங்கள் காவல் எல்லைக்குள் தனிப்படை அமைத்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கமிஷனர் உத்தரவிடப்பட்டுள்ளார்.


Tags : graduates ,Police commissioner ,Mancha ,Manga , Mancha thread, graduates, gangster law, police commissioner
× RELATED சினிமா பிரபலங்கள், பொதுமக்கள்...