×

திருமழிசை மார்க்கெட்டில் கொரோனா ஆய்வு தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: கோயம் பேடு சந்தை மூடப்பட்டு, திருமழிசை சந்தை செயல்பட தொடங்கி இன்றுடன் 10 நாள் ஆகும் நிலையில்,  பெரும் கூட்டம் கூடுகிறது.   சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; முகக்கவசமும், கையுறைகளும் அணிய வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், திருமழிசை சந்தையில் ஆரம்பத்தில் சில நாட்களைத் தவிர, அடுத்து வந்த நாட்களில் அவை கடைபிடிக்கப்படவில்லை.  இத்தகைய சூழலில் திருமழிசை சந்தையும் கோயம்பேடாக மாறினால், அதன் விளைவுகளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளால் தாங்க முடியாது.

எனவே, நோய்த்தடுப்பு மிகவும் முக்கியமாகும். திருமழிசை சந்தையை முழுமையான சுகாதார கண்காணிப்புக்குள் கொண்டு வந்து, அங்கிருந்து கொரோனா பரவுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக சிறப்பு காவல் அதிகாரிகளையும், சுகாதார அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும்.

Tags : Ramadas , Tiramisai Market, Corona, Ramadas
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்