×

கிராமங்களில் சலூன் கடைகள் திறப்பு: கூட்டம் இல்லாததால் உரிமையாளர்கள் ஏமாற்றம்

மதுரை: மதுரையில் கிராம பகுதிகளில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 144 தடை உத்தரவு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமலில் உள்ளது. 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது, மாவட்ட நிர்வாகம் பல்வேறு தளர்வுகளை வெளியிட்டது. அதில், மாவட்டத்தில் கிராம மற்றும் ஊரக பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. ‘அதன்படி, கிராம பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் மாநகராட்சி உள்ளிட்ட நகர் பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதில்லை. மேலும் சலூன் கடைக்காரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கிராமப்புற சலூன் கடைக்காரர்கள் கூறுகையில்,‘‘மாநகராட்சி நகர் பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் திறக்கப்படாததால், நகரையொட்டி கிராமப்பகுதிகளில் உள்ள சலூன் கடைகளுக்கு அதிகளவில் கூட்டம் வரும் என எதிர்பார்த்தோம். அதனால், கூடுதலாக சம்பள ஆள் வேலைக்கும் ஏற்பாடு செய்தோம். ஆனால், எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. ஒன்றிரண்டு ஆட்கள் மட்டுமே வந்ததால், பெரும் ஏமாற்றமடைந்தோம். மக்களிடம் கொரோனா பயம் போகாததே இதற்கு காரணம். எங்களுக்கு அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் உதவித்தொகை போதாது,’’ என்றனர்.

Tags : Opening ,saloon shops ,villages ,meeting ,Owners , Saloon Shops, Opening
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா