×

மாலத்தீவில் சிக்கி தவிக்கும் தமிழக தொழிலாளர்களை மீண்டும் தாயகம் அழைத்துவர கோரி தயாநிதி மாறன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்

சென்னை: மாலத்தீவில் சிக்கி தவிக்கும் தமிழகத்தைச் சார்ந்த தொழிலாளர்களை மீண்டும் தாயகம் அழைத்துவர தயாநிதி மாறன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். மாலத்தீவில் சிக்கி தவிக்கும் தமிழகத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் பலர் வாட்ஸ் அப் மூலமும், தொலைபேசி மூலமும் தாங்கள் தற்போது நிலவி வரும் கொரோனா நோய் தொற்று காலத்தில் வேளைக்கு செல்ல முடியாமலும் ஊதியம் ஏதுமின்றியும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் கூறினார். தினந்தோறும் கடும் இன்னல்களை சந்தித்து வரும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை கப்பல் அல்லது விமானம் மூலம் தாயக அழைத்து வர கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Minister of Foreign Affairs ,Dayanidhi Maran ,Tamil Nadu ,Maldives ,Minister of External Affairs , Minister of Foreign Affairs of the Maldives, Tamil Nadu Workers, Dayanidhi Maran
× RELATED சென்னையில் இருந்து ஜோத்பூர் மற்றும்...