×

அச்சு ஊடகங்கள் சந்திக்கும் நெருக்கடிகளில் மீளவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் திமுக துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: அச்சு ஊடகங்கள் சந்திக்கும் நெருக்கடிகளில் மீளவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் திமுக துணை நிற்கும் என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதே சமயம், பேரிடரை எதிர்கொள்ளும் திட்டமும் செயல்பாடுகளும் அரசுகளிடம் இல்லாததை அச்சு ஊடகங்கள் வெளிக் கொணர்ந்து, அழுத்தம் கொடுத்து, மக்களுக்கு உதவிகள் கிடைத்திடச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கையில் அவர் கூறியதாவது; பத்திரிகை அச்சுக் காகிதம் மீதான வரியை குறைக்க வேண்டும் என அச்சு ஊடகங்கள் கோரிக்கை வைத்துள்ளன. மேலும் அரசு விளம்பரம்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்.

மேலும் அரசு விளம்பரக் கட்டணத்தை னுறு விழுக்காடு உயர்த்தி வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதே வேளையில் மத்திய-மாநில அரசுகளின் அலட்சியம், தாமதம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை பத்திரிக்கைகள் தான் வெளிக்கொண்டு வர வேண்டும். ஜனவரி கடைசி வாரத்திலேயே கொரோனா தொற்று கேரளாவுக்கு வந்துவிட்டது. உலக சுகாதார அமைப்பும் எச்சரித்தது. ஆனால் பிப்ரவரி 3-ம் வாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அவர்கள் லட்சக்கணக்கானோரை கூட்டி வரவேற்பு கொடுத்தார். மார்ச் மாதம் திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கொரோனா குறித்து பேச முயன்ற போது அனுமதி மறுக்கப்பட்டது.

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் சிலர் முக கவசம் அணிந்திருந்தனர். அவை தலைவர் வெங்கையா நாயுடு முக கவசங்களை அகற்ற உத்தரவிட்டார். பிரதமர் அறிவித்த பொருளாதார ஊக்குவிப்பு, ஜிஎஸ்டியில் வெறும் 0.91 சதவிகிதம் தான் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். மேலும் பல ரேடிங்க் நிறுவனங்களும் இதனை உறுதி செய்துள்ளன. மாநில அரசிடம் எதிலும் வெளிப்படை தன்மை இல்லை. பரிசோதனைகள் குறித்து மாவட்ட வாரியான விவரங்களை வெளியிட வேண்டும் என பலமுறை கேட்டு விட்டேன். அதில் உள்ள மர்மம் என்ன?. நிவாரண உதவியாக ரூ.5000 கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் பலமுறை கேட்டுவிட்டோம். இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : DMK ,MK Stalin , Print media, demand, DMK, MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...