×

கூடுதல் பேருந்துகள், ரயில்களை இயக்குக : புலம்பெயர் தொழிலாளர்களின் துன்பங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்களின் துன்பங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநில தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க கூடுதல் பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகளை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நான்காம் கட்ட ஊரடங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை குறைத்து விட வேண்டாம்; விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என, மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதி இருக்கிறார். அதில்

*புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு ரயில்களை மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.

*புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்க இடம், உணவு, குடிநீர், சுகாதாரவசதிகள் செய்து தர வேண்டும்.

*ஊரடங்கால் வெளியூர்களில் சிக்கிவிட்ட மாணவர்கள், சுற்றுலா பயணிகளை சொந்த ஊர் அனுப்ப வேண்டும்.

*புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்ல வேண்டிய மாநில அரசுகளுடன் ஆலோசித்து செயல்பட வேண்டும்.

*புலம்பெயர் தொழிலாளர்களின் பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் மேலும் அவர்களுக்கான ஓய்வு கூடங்களை ஏற்படுத்த வேண்டும்.

*ரயில் அட்டவணை, டிக்கெட் முன்பதிவு தகவல் ரயில்வே மூலம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : states ,government ,Central ,migrant workers , Extra, Buses, Trains, Diaspora, Workers. Suffering, action, states, federal government, directives
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்