×

கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடையாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மலையில் சேதமடையாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுராந்தகத்தில் கொள்முதல் நிலையங்களில் மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடைந்ததாக நாளிதழில் செய்தி வெளியானது. அதில் குறிப்பாக அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் வெட்டவெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மூட்டைகள் அனைத்தும் மழையில் முழுவதும் நனைந்து சேதமடைந்துள்ளது.

இதேபோன்று, விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு சென்று கொட்டி வைத்த நெல் குவியல்களும் மழையின் காரணமாக மிகுந்த பாதிப்படைந்துள்ளது. ஏற்கனவே, பல கஷ்டங்களுக்கு இடையே  அறுவடை முடிந்து விற்பனைக்கு கொண்டு வந்த நெல்லும் வீணாகிப்போனது. இது விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதனால், பல கோடி மதிப்புள்ள சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன. இதனால், விவசாயிகளுக்கும், அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு ஐகோர்ட் தாமாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மேலும் இந்த வழக்கில் நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடைவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக மே 22-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Tags : purchase centers ,Government ,Icort , Purchase Station, Paddy Bundles, Damage, Government, Icort
× RELATED டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு...