×

குமரியில் தேன் உற்பத்தி கடுமையாக பாதிப்பு: தேனீக்களை பராமரிக்க முடியாத சூழல் நிலவுவதாக தேனீக்கள் வளர்ப்போர் கண்ணீர்

கன்னியாகுமரி: கொரோனா ஊரடங்கால் தேன் உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தேனீக்கள் வளர்ப்போர் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், கொரோனா பாதிப்பு குறைவாகவுள்ள இடங்களில் கடந்த 4-ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 4-ம் கட்ட ஊரடங்கிலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

ஆனாலும், ஊரடங்கு உத்தரவு  அமலில் உள்ளதால், பொதுமக்கள் அவசியமின்றி வெளியை வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இதனிடையே கொரோனா ஊரடங்கால் தேன் உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தேனீக்கள் வளர்ப்போர் வேதனை தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தேன் உற்பத்தி தொழில் பிராதனமாக இருந்து வருகிறது. வீடுகள் மற்றும் ரப்பர் தோட்டங்களில் தேன் கூடுகள் அமைத்து தேனீக்கள் வளர்க்கப்படுகின்றன. இது போன்ற கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலும் வளர்க்கப்படும் தேனீக்களின் கூடுகளை குமரி மாவட்ட தொழிலாளர்கள் பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் ஊரடங்கு எதிரொலியாக அண்டை மாநிலங்களுக்கு செல்ல முடியவில்லை என்பது தமிழக தேன் தொழில் பணியாளர்களின் ஆதங்கம். சில மாதங்களாக தேனீக்களை பராமரிக்க முடியாமல் போனதால் சுமார் 750 கோடி ரூபாய் அளவுக்கு தேன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே அண்டை மாநிலங்களுக்கு சென்று தேன் கூடுகளை பராமரிக்க குறைந்தது 2 தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தேன் உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags : Kumari ,Beekeeper , Kumari, honey production, impact
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...