×

தடுப்பூசி இல்லாமல் கொரோனா நோயை கட்டுபடுத்தும் சீனாவின் ஆன்டிபாடி மருந்து :எலிகளுக்கு நடந்த பரிசோதனையில் வெற்றி

பெய்ஜிங்: தடுப்பூசி இல்லாமல் கொரோனா நோயை கட்டுபடுத்த முடியும் இதற்கான புதிய மருந்தை சீனா கண்டு பிடித்து உள்ளது. உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி இல்லாமலேயே கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்தும் மருந்து ஒன்றை சீன ஆய்வகம் உருவாக்கி உள்ளது. சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான, பீக்கிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் பரிசோதிக்கப்பட்டுள்ளது ஒரு ஆன்டிபாடி மருந்து. பாதிக்கப்பட்டவர்களுக்கு குணமடையும் வேகத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கொரோனா வைரஸிலிருந்து குறுகிய கால நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட அளிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  

எலிகளுக்கு ஆன்டிபாடிகளை செலுத்தி சோதனை செய்ததில் இந்த மருந்து வெற்றி பெற்றது என்று பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட ஆய்வு மைய ஜெனோமிக்ஸின் இயக்குனர் சன்னி ஸீ தெரிவித்தார்.
எலிகளுக்கு நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், மனிதர்களுக்கு பரிசோதனை செய்யும் முயற்சிகள் தொடங்க உள்ளதாகவும், பன்றிக்கு இந்த மருந்து கொடுத்து பரிசோதனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : China , Vaccine, coronavirus, disease, china, antibody, drug, mice, experiment, success
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்