×

விருத்தாசலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்: பதற்றம் நிலவுவதாக காவலர்கள் குவிப்பு

கடலூர்: உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடலூரில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தர்மநல்லூர் என்ற கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலில் இரு தரப்பினர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. முன்னதாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜேஸ்வரி என்பவரும் அக்சயா என்பவரும் போட்டியிட்டுள்ளனர். இதில் ராஜேஸ்வரி என்பவருக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்ததால் அவர் வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று இரவில் இருந்தே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை அக்சயா தரப்பினர் கும்பலாக சேர்ந்து கொண்டு ராஜேஸ்வரி தரப்பினரை கடுமையாக கட்டையாலும், கற்களாலும் தாக்கியுள்ளனர். இதில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பட்டிருக்கின்றனர். இந்த மோதலானது உள்ளாட்சி தேர்தலில் இருந்தே சிறிது சிறிதாக புகைந்து தற்போது பெரிய மோதலாக வெடித்துள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Conflict ,Guards , Crisis, confrontation, guards focus
× RELATED லடாக்கின் சீன எல்லையோரத்திற்கு...