×

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு சூடுபிடிக்கும் இளநீர் விற்பனை

சேலம்: தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு கத்திரி வெயில் காலம் துவங்கியது. இதனால் அனல் காற்று வீசியது. இதன் காரணமாக உடலில் வெப்பம் அதிகரித்து மஞ்சள் காமலை, நீர் சத்து குறைதல், வயிற்று போக்கு, சரும நோய்கள் என பல்வேறு பிரச்னைகளுக்கும் மக்கள்  ஆளாகின்றனர். இந்நிலையில் உடல் சூட்டை தணிக்கவும், வெப்பத்தினால் ஏற்படும் நோய்களிலிருந்து தற்காத்து கொள்ளவும்  குளிர்பானங்கள், இயற்கையான உணவுகளை மக்கள்  விரும்பி சாப்பிடுகின்றனர். இதில் குறிப்பாக இளநீர், கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து இளநீர் வியாபாரிகள் கூறுகையில், ‘‘கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள பெரியவர்கள், குழந்தைகளுக்கு உடல் உஷ்ணம் ஏற்பட்டு கோடை கால நோய்களுக்கு ஆளாகின்றனர். இதனால் ஏரளாமானவர்கள் இளநீர் பருக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து அதிகளவு இளநீர் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி இளநீருக்கு எப்போதும் தனி சுவை உண்டு. இதனால் வாடிக்கையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. தற்போது இளநீர் ₹40 முதல் ₹50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இளநீர் குடிப்பதால் உடல் சூடு தணிவதுடன், ரத்த கொழுப்பு, ரத்த சோகைக்கும் நிவாரணம் கிடைக்கிறது,’’ என்றனர்.

Tags : Increase ,summer sun impact, hot water, sales
× RELATED ரத்னம் படத்திற்கு தியேட்டர்...