மருந்து கண்டுபிடிக்கும் முன்பே கொரோனா வைரஸ் இயற்கையாகவே அழிந்துவிடும் : உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி கருத்து

கொரோனா வைரஸ் உலகில் அழியாமல் நிலைநிறுக்கும் உலக சுகாதார அமைப்பு என்று கூறி இருந்த நிலையில், கொரோனா வைரஸ் தானாக அழிய வாய்ப்புள்ளது என்று அந்த அமைப்பின் மூத்த விஞ்ஞானி கருத்து தெரிவித்துள்ளார். சுகாதார அமைப்பின் புற்றுநோயியல் துறை முன்னாள் விஞ்ஞானியான கரோல் சிக்கோரா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முன்பே அந்த நோய்க்கிருமி தானாக இயற்கையாகவே அழிந்துவிடும்.பொதுவாக நாம் கணிப்பதை விட நமக்கு அதிகமாகவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவே கொரோனா தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்தினாலே நோய்க்கிருமி படிப்படியாக தானாகவே அழிந்துவிடும்,என்றும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதனிடையே லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா மருந்து, குரங்கு மூலம் பரிசோதித்து பார்க்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்தின் காம்பிரிட்ஜ் நகரைச் சேர்ந்த மாடர்னா என்ற மருந்து நிறுவனம் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பாதி வெற்றி கண்டுவிட்டதாக தெரிவித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு உருவான சார்ஸ் நோய் 2012ம் ஆண்டு உருவான மெர்ஸ் என்ற நோய்க்கும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனிடையே கொரோனா வைரஸ் உலகின் எண்டமிக் வகையைச் சேர்ந்த எச்ஐவி ஏய்ட்ஸ், மலேரியா போன்ற எப்போதும் அழியாமல் இருக்கும் என்று ஓரிரு நாட்களுக்கு முன்பு, சுகாதார நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் தானாக அழிந்துவிடும் என்று அதே அமைப்பைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>