×

சீர்காழியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் டாஸ்மாக் கடையில் மது வாங்கினாரா?: குடிமகன்கள் அதிர்ச்சி

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சர்க்கான் தெருவில் வசித்த 44 வயது மதிக்கத்தக்க ஒருவர் சென்னையில் சாலையோர கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் சென்னை அடையார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார் அப்போது அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் அங்கிருந்து சொந்த ஊரான சீர்காழி வந்து விட்டார். இந்நிலையில் சீர்காழியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுபான வாங்கி அருந்தியதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று மதுபானம் வாங்கி சென்றதாக கூறப்படும் சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதனால் குடிமகன்கள் அச்சமடைந்துள்ளனர். இதை தொடர்ந்து, சீர்காழி சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் சென்னை அடையாறு மருத்துவமனையில் தொடர்பு கொண்டு அந்த நபரை பற்றி விபரம் கேட்டறிந்தனர். தொடர்ந்து ர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்கள் இரண்டு பேர் சீர்காழி அரசு மருத்துவமனையில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.


Tags : Coroner ,Citizens ,Task Shop ,Victim of Coroner ,shop ,liquor store ,victim , Coroner's victim,shop bought alcohol, task shop, Citizens shocked
× RELATED மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 26,875 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு