×

வலுவிழந்தது ஆம்பன் புயல்: நாளை கரையை கடக்கும் நிலையில் அதி தீவிர புயலாக மீண்டும் மாறியது...சென்னை வானிமை மையம் தகவல்...!

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆம்பன் புயல் வலுவிழந்து அதி தீவிர புயலாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள அம்பன் புயல் நேற்று கடும் புயலாக மாறி மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டது. பின்னர் அது மிக கடும் புயலாக (super cyclone) வலுப்பெற்று வடக்கு மற்றும் வட கிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகரும் தன்மை கொண்டதாக மாறியது. பொதுவாக புயல் கரை கடக்கும் போது வலுவிழக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.

ஆனால் இந்த சூப்பர் புயல் கரை கடக்கும் போதுகூட வலுவிழக்காது என்று கூறப்பட்டது. குறிப்பாக, இந்த சூப்பர் புயல் (monster) ஆக மாறியுள்ளதாக கணிக்கப்பட்டது. ஆனால், தற்போது, சூப்பர் புயலாக இருந்த ஆம்பன் புயல் சற்று வலுவிழந்து அதிதீவிர புயலாக நிலை கொண்டுள்ளது. கொல்கத்தாவிற்கு தென் மேற்கே சுமார் 7,000 கி.மீட்டர் தொலைவில் மேற்கு மத்திய கடல் பகுதிகளில் புயல் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட கிழக்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை வங்கதேசத்தில் கரையை கடக்கும் என்றும் இதனால், மேற்கு மத்திய கடல், தெற்று மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


Tags : Amban Storm: Storm ,coast , வலுவிழந்து ஆம்பன் புயல்: நாளை கரையை கடக்கும் நிலையில் அதி தீவிர புயலாக மீண்டும் மாறியது...சென்னை வானிமை மையம் தகவல்...!
× RELATED சாலையின் இருபுறமும் மணலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்