×

சாலை விபத்தில் மருத்துவர் பலி

தாம்பரம்: மேற்கு தாம்பரம், ராஜாஜி சாலையை சேர்ந்தவர் சரவணன் (31), பல் மருத்துவர். மேற்கு தாம்பரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் கிளினிக் நடத்தி வந்தார். இவர், நேற்று முன்தினம் அம்பத்தூரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலை வழியாக தாம்பரம் புறப்பட்டார்.
மேற்கு தாம்பரம், கன்னடபாளையம் அருகே வந்தபோது, இவரது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சரவணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Doctor ,road accident , Doctor killed ,road accident
× RELATED கொரோனாவுக்கு மருத்துவர் பலி