×

சொந்த ஊருக்கு அனுப்ப கோரி வடமாநில தொழிலாளர்கள் மறியல்

பல்லாவரம்: பல்லாவரம், பம்மல் ஆகிய பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய வட மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.  ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்கள் வேலையின்றி, வறுமையில் தவித்து வருவதால், தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப கோரி அரசிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை பம்மல், நாகல்கேணி எம்ஜிஆர் சிலை அருகே திரண்ட 500க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி, பல்லாவரம் - திருநீர்மலை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, 3 நாட்களில் அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Northern Territory ,home , Northern Territory Workers, Pickle, Corona, Curfew
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு