×

இலவச உணவு வழங்குவது நிறுத்தம்: அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது நிறுத்தப்பட்டு கட்டணம் வசூலிப்பது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.  சென்னையில் உள்ள காலையில் இட்லியும், மதியம் கலவை சாதமும், இரவில் சப்பாத்தியும் வழங்கப்படுகிறது. குறைந்த விலையில் இந்த உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில்  கொரோனா பாதிப்பின் காரணமாக அம்மா உணவகங்களில் மே 3 வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து மே 4ம் தேதி முதல் அம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிக்கபட்டது.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள் மீண்டும் இலவசமாக அம்மா உணவகத்தில் உணவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இதனால்,  மே 17ம் தேதி வரை அம்மா உணவகங்களில் மீண்டும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்தது.இந்நிலையில், 3ம் கட்ட ஊரடங்கு நேற்று முன்தினம் நிறைவடைந்து நேற்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு துவங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அம்மா உணவகங்களில் நேற்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதன்படி நேற்று முதல் சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 30 நாட்களுக்கு மேல் அம்மா உணவகங்களில் தன்னார்வத்துடன் அளித்த நன்கொடை மூலம் இலவசமாக உணவு வழங்கப்பட்டது வந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : mom restaurants ,Madras Corporation , Free food, mom restaurants, free of charge, Chennai Corporation
× RELATED ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள 407...