×

வியாபாரிகள் சாலை மறியல்

பல்லாவரம்: குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதியில் ஊரடங்கு உத்தரவால் நூற்றுக்கும் மேற்பட்ட மளிகைக்கடை உட்பட அத்தியாவசிய கடைகள் மூடிக்கிடக்கின்றன. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக்கூறி, அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் நேற்று மாங்காடு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா, விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வியாபாரிகள் சமூக இடைவெளியுடன் வியாபாரம் செய்வதாக உறுதியளித்ததையடுத்து கலெக்டர் அனுமதி அளித்தார். இதையடுத்து கடந்த 25 நாள்களுக்கும் மேலாக மூடி இருந்த கடைகள் திறக்கப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.


Tags : Merchants ,road pickup
× RELATED காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக வட...