×

கஞ்சா, மது போதையில் ரகளை ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டருக்கு அடிஉதை: ரவுடி கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள நேரு நகர் பகுதியை சேர்ந்த ரவுடி புல்லட் (19), தனது நண்பர்களுடன்  நேற்று முன்தினம் மது மற்றும் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டார். மேலும் ஆட்டோ மூலம் சாலையில் சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இதில் இருவர் காயமடைந்தனர்.
இதையடுத்து, திருப்பருத்திக்குன்றம், நித்யானந்தம் நகரில் பட்டா கத்தியை வைத்துகொண்டு ரகளையில் ஈடுபட்டார். இதை தட்டிக்கேட்ட ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரை புல்லட் தாக்கியுள்ளார். அதன்பிறகு செவிலிமேடு பகுதியில் தனது நண்பர் கார்த்திக் வீட்டுக்கு சென்று உணவு கேட்டு தகராறு செய்துள்ளார்.

இந்த தகராறில் ஒருவரை ஒருவர் கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை விஷ்ணுகாஞ்சி போலீசார், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்க முயன்ற டாக்டர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மது மற்றும் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Inspector ,Rowdy , Rowdy arrested for ganja, alcohol addiction, inspector
× RELATED சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில்...