×

நாட்டாமை... தீர்ப்ப மாத்து...மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை

புதுடெல்லி: `‘மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகள் போதுமானதல்ல என்றும், 10 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இணையான சலுகைகள் வழங்கப்படவேண்டும்’’ என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை சீரமைக்கும் வகையில் மத்திய அரசு 20 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார சலுகை ஊக்குவிப்பு அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருந்தது. இது வெறும் 1.86 லட்சம் கோடி மதிப்புடையது என குற்றம்சாட்டி காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:  

மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார சலுகை ஊக்குவிப்பு அறிவிப்பில் ஏழைகள், புலம்பெயர்ந்தவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள் சிறு கடைக்காரர்கள் உள்ளிட்டோருக்கு எந்த  சலுகையும் கிடைக்கவில்லை. மக்களை ஏமாற்றமடைய செய்யும்வகையில் மத்திய அரசு அறிவித்துள்ள இந்த பொருளாதார சலுகைகளை மறுஆய்வு செய்ய வேண்டும்.  இந்த சலுகை அறிவிப்பு 10 லட்சம் கோடி அளவுக்கு கூடுதல் செலவு கொண்டதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு இணையானதாகவும் இருக்கவேண்டும். சீர்திருத்தம் என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் மத்திய அரசு இதை அறிவித்துள்ளதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது. இந்த சலுகைகள் தொடர்பாக நாடாளுமன்ற குழுவாவது விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நம்பரை நல்லா ஞாபகத்துல வச்சிக்கோங்கோ மக்களே...
ப.சிதம்பரம் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘பிரதமரும், நிதியமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்குவிப்பு சலுகையின் மதிப்பு 20 லட்சம் கோடி அல்ல. வெறும் 1,86,650 கோடி தான். இந்த எண்ணை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், இன்னும் சில மாதங்களில் இது தொடர்பாக உண்மை தெரிந்துவிடும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Pillai ,government ,Central Government , Central Government, P. Chidambaram
× RELATED சாலை சீரமைக்க கோரிக்கை