×

சீனாவிடம் இருந்து கொரோனா பரவியதா? ஆராய ‘ஹூ’விடம் 60 நாடுகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது குறித்து கண்டுபிடிக்க உலக சுகாதார அமைப்பை வலியுறுத்தும் நாடுகளுக்கு ஆதரவு அளிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. இது வுகான் வைரஸ் ஆய்வகத்தில் இருந்து பரவியதாகவும் மற்றொருபுறம் விலங்குகளில் இருந்து பரவியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனிடையே கொரோனா விலங்குகளில் இருந்து பரவியதா என்பதை கண்டுபிடிக்க நடுநிலையான, தன்னிச்சையான, விரிவான விசாரணை நடத்தும்படி உலக சுகாதார அமைப்பை (ஹூ) 60க்கும் மேற்பட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த பட்டியலில் இந்தியா இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின், 73வது உலக சுகாதார மாநாடு ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. இதில் கொரோனா தொற்று ஏற்பட என்னென்ன காரணங்கள் என்பது குறித்து கூடுதலாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் கொரோனா தொற்று ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு நிலையான, தன்னிச்சையான, விரிவான மதிப்பீடு செய்ய வலியுறுத்தி ஐரோப்பிய யூனியன் வரைவு தீர்மானம் இயற்றியுள்ளது. இதற்கு ஆஸ்திரேலியா, வங்கதேசம், பூடான், இந்தோனேசியா, ஜப்பான், ஜோர்டான், மலேசியா, மாலத்தீவுகள், நார்வே, ரஷ்யா, இங்கிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட 60 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த தீர்மானத்தில் கொரோனா தடுப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், விலங்குகளின் சுகாதாரம், ஐநா.வின் உணவு மற்றும் விவசாயத்துக்கான அமைப்புகள் விலங்குகள் மூலம் நோய் தொற்று மனிதர்களுக்கு எப்படி பரவியது என்பது குறித்து கண்டிபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விலங்குகள், மனிதர்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்கவும் விலங்குகளிடம் உருவாகாமல் தடுக்கவும் முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

அள்ளி வழங்கிய சீனா நெருக்குதலிலிருந்து தப்பிக்க யுக்தியா?
சீனாவில் இருந்துதான் கொரோனா பரவியது என்று, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, அதற்கான நிதியுதவியையும் அமெரிக்கா நிறுத்தியது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்புக்கு சீனா, 15,200 கோடி நிதியை 2 ஆண்டுகளில் படிப்படியாக வழங்குவதாக அறிவித்துள்ளது. தன் மீதான குற்றச்சாட்டின் உலக சுகாதார அமைப்பு தனக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்பதற்காக இவ்வளவு பெரிய நிதியை சீனா அள்ளி வழங்கி உள்ளதாக நிபுணர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

Tags : China ,Corona ,countries ,Hu , China, Corona, 60 countries
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்