×

கொரோனா நிவாரணத்துக்கு பிச்சைக்காரர் 10 ஆயிரம் நிதி

மதுரை:  தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பூள்பாண்டி (68). இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மும்பையில் கூலி வேலை பார்த்து வந்த இவரை, ‘பணம் இருந்தால், குடும்பத்துடன் சேர்ந்து வாழ். இல்லாவிட்டால் வீட்டிற்கு வர வேண்டாம்’ எனக்கூறி குடும்பத்தினர் வெளியேற்றி விட்டனர்.
 இதனால் அவர் ஒவ்வொரு நகரமாக சென்று பிச்சை எடுத்து வந்தார். நீண்டநாட்களாக மதுரையில் தங்கியிருந்த இவர், ஊரடங்கால் இங்கிருந்து வெளியூர் செல்ல இயலவில்லை. மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் மற்றும்  பூ மார்க்கெட் பகுதியில் பிச்சையெடுத்து சேர்த்து வைத்த 10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக மதுரை கலெக்டர் வினயிடம் நேற்று வழங்கினார்.

Tags : Corona , 10 thousand funds , begging, Corona relief
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...