×

சபரிமலை சென்று சர்ச்சையை ஏற்படுத்திய ரெஹானா மீது மத உணர்வை புண்படுத்தியதாக புதிய வழக்கு

திருவனந்தபுரம்: சபரிமலை சென்று  சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமா மீது மத உணர்வுகளை புண்படுத்தியதாக  கூறப்பட்ட புகாரில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ரெஹானா பாத்திமா. மாடல் அழகியான ெரஹானா பாத்திமா கொச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தவர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருமுடி கட்டுடன் சபரிமலை சென்று சர்ச்சையை ஏற்படுத்தினார்.  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் யூடியூபில் சமையல் குறிப்பை வெளியிட்டார்.

அதில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக எர்ணாகுளத்தை சேர்ந்த ரெஜீஷ் ராமசந்திரன் என்பவர் எர்ணாகுளம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். ஏற்கனவே மத உணர்வுகளை புண்படுத்தியவழக்கில் ஜாமீனில் உள்ள இவர் நிபந்தனைகளை மீறி மீண்்டும் மத உணர்வுகளை புண்படுத்தி யுள்ளார். எனவே அவரை கைது செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து எர்ணாகுளம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு ெசய்துள்ளனர்.

Tags : Sabarimala ,Rehana , Sabarimalai, Rehana, New Case
× RELATED ஆனி மாத பூஜை சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு