×

டிஎன்பிஎல் தொடர் தள்ளிவைப்பு

சென்னை: கொரோனா தொற்று பீதி காரணமாக தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) தொடரின் 5வது தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரக்கெட் சங்க(டிஎன்சிஏ) கவுரவச் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) போட்டியின் 5வது தொடர் ஜூன் 10ம் தேதி தொடங்க இருந்தது. இந்த தொடரை தள்ளி வைக்க டிஎன்சிஏ முடிவு செய்துள்ளது. தள்ளி வைக்கப்பட்ட தொடருக்கான அட்டவணை உரிய நேரத்தில் வெளியிடப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்து. ஐபிஎல் போட்டியின் 13வது தொடர் மார்ச் 29 முதல் மே24 வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். அது முடிந்த பிறகு டிஎன்பிஎல் தொடங்குவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று பீதி காரணமாகஐபிஎல் எப்போது நடக்கும் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலை.

அதனால் டிஎன்பிஎல் தொடரும் இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடைபெறுவதை பொறுத்தே டிஎன்பிஎல் நடப்பது உறுதியாகும். டிஎன்பிஎல் போட்டியின் 5வது தொடர் ஜூன் 10ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை நடைபெற இருந்தது. முதல்முறையாக சேலம், கோவை ஆகிய நகரங்களிலும், வழக்கம்போல் திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் இந்தப்போட்டிகள் நடத்த திட்டமிட்டிருந்தனர். டிஎன்பிஎல் தொடரில் முதல்முறையாக சென்னையில் ஒருபோட்டி கூட கிடையாது.


Tags : DNPL ,TNPL , TNPL Series
× RELATED தள்ளிப் போகிறது 5வது சீசன் டிஎன்பிஎல்