சில்லி பாயின்ட்…

* 2009 ஐபிஎல் தொடரில் விளையாடியபோது ஷேன் வார்ன் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினேன். என்னை ஒரு முட்டாள்தனமான பேட்ஸ்மேனாகவே அவர் மாற்றிவிட்டார் என்று விராத் கோஹ்லி கூறியுள்ளார்.

*  தற்போதைய நிலையில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது இந்திய அணி கேப்டன் கோஹ்லி தான் என்று ஆஸி. அணி முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் பாராட்டி உள்ளார்.

* ரசிகர்கள் இல்லாமல் காலி ஸ்டேடியங்களில் கிரிக்கெட் விளையாடுவது மணப்பெண் இல்லாமல் திருமணம் நடப்பதற்கு ஒப்பானது என்று பாக். அணி முன்னாள் வேகம் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

* மல்யுத்தம், குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் ஒருவரை ஒருவர் தொடுவதற்கான அவசியம் உள்ளதால் தங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

* 1990களில் இந்திய அணி சச்சின் டெண்டுல்கரையே அதிகம் சார்ந்து இருந்தது. அவர் ரன் குவிக்காத போட்டி மிக மிக அபூர்வம் என்ற அளவுக்கு போட்டிக்கு போட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் அதற்கு ஒரு காரணம் என்று முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

*  உஸ்மான் கவாஜா திறமையான வீரர் தான் என்றாலும், தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடத் தவறியதால் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். மீண்டும் தேசிய அணியில் அவர் இடம் பிடிப்பது மிக மிகக் கடினம் என்றாலும், அதற்கான வாய்ப்பே இல்லை என ஒதுக்கிவிட முடியாது என்று ஆஸி. அணி முன்னாள் கேப்டன் பான்டிங் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>