அனுஷ்கா எதிர்ப்பை மீறி இணையதளத்தில் வெளியாகும் நிசப்தம்

அனுஷ்காவின் எதிர்ப்பை மீறி அவரது படம் இணையதளத்தில் வெளியாகிறது. மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்பட பலர் நடித்துள்ள படம் நிசப்தம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் படம் வெளியாகிறது. இந்த படம் கடந்த ஏப்ரலில் திரைக்கு வரவேண்டியது. ஊரடங்கு காரணமாக படம் நிறுத்தப்பட்டது. இதை இணையதளத்தில் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்தார். இதற்கு அனுஷ்கா எதிர்ப்பு தெரிவித்தார். ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறந்த பிறகே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார்.

இதனால் தயாரிப்பாளருக்கும் அனுஷ்காவுக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் படக்குழுவினர் சமாதானம் செய்து வைத்தனர். இப்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாதங்கள் தியேட்டர்கள் திறக்கப்படாது என்று கூறப்படுகிறது. இதனால் நிசப்தம் படத்தை இணையதளத்தில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு எடுத்து டிஜிட்டல் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளார். அனுஷ்காவின் எதிர்ப்பை மீறி அவரது படம் இணையத்தில் வெளியாக உள்ளது.

Related Stories:

>