×

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ராயபுரம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், மயிலாப்பூர் பகுதிகளில் வீடு வீடாக பரிசோதனை: அமைச்சர் உதயகுமார் தகவல்

* கொரோனா தொடர்பாக யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்.
* அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறோம்.
* சென்னையில் ஒரு நாளுக்கு 10 ஆயிரம் பேர் வரை கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது

சென்னை: சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ள ராயபுரம், கோடம்பாக்கம்,  வளசரவாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று கொரோனா சோதனை நடைபெறுவதாக அமைச்சர் உதயகுமார் கூறினார். இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையையொட்டி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதால் அதற்கு ஏற்றாற்போல நிவாரண முகாம்கள் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அம்பன் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு வங்காள விரிகுடா மற்றும் மேற்கு வங்காளத்தை கடக்கும் என்று தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் மத்திய, தெற்கு மற்றும் வடக்கு வங்காள விரிகுடாவில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் இன்று தெற்கு, மத்திய வங்காள விரிகுடாவுக்கு செல்ல வேண்டாம். அம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. இதனால் மக்கள் அச்சப்படத்தேவை இல்லை.சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்தால், ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு கொரோனா பரவாது. வாய், மூக்கு வழியாகத்தான் பெரும்பாலும் உள்ளே போகிறது.

 வீடு, வீடாக சென்று கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னையை பொறுத்தமட்டில் பாதிப்பு அதிகம் உள்ள ராயபுரம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, தேடிச்சென்று கண்காணிப்பு செய்கிறோம். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறோம். கொரோனா ஒழிப்பு பணியில் அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுகின்றன. இந்தியாவிலேயே அதிகமாக குறிப்பாக, மராட்டியத்தை விடவும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்படுகின்றன.

சென்னையில் 10 ஆயிரம் பேர் வரையிலும் ஒரு நாளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொடர்பாக யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். கொரோனா ஒழிப்பு பணியை போன்று, மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அனைவரும் இணைந்து செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Udayakumar House ,Valasaravakkam ,Home Inspection of Coronary Influence Royapuram ,Kodambakkam ,testing ,Chennai ,areas ,Corona ,Mylapore ,Minister ,Luz ,Royapuram , Chennai, Corona, Royapuram, Kodambakkam, Resource Development, Mylapore, Minister Udayakumar
× RELATED சென்னை அடையாறு, பெருங்குடி,...