×

வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்

புதுடெல்லி: `‘மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலச அரசுகள் கடுமையாக பின்பற்ற வேண்டும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.  கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இது தற்போது 4வது கட்டமாக வரும் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கையொட்டி மத்திய அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை நீர்த்துக்போக செய்யக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில மற்றும் யூனியன்பிரதேச தலைமை செயலாளர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 11ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கொரோனா நிலமை குறித்து கேட்டறிந்த பின்பே 4ம் கட்ட ஊரடங்குக்கான வழிகாட்டு ெநறிமுறைகளை அறிவித்துள்ளார். ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுபாடுகளை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீர்த்துப்போகச் செய்யக் கூடாது. நிலமைக்கு ஏற்ப தேவைப்பட்டால் பல்வேறு மண்டலங்களிலும் கூடுதல் தடைகளை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களே அறிவிக்கலாம். தேவைப்பட்டால் கூடுதல் கட்டுப்பாடுகளையும் விதித்துக்கொள்ளலாம்.

புதிதாக விதிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகங்கள் கடுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். நேற்று முதல் புதிய வழிகாட்டுதல் அமலுக்கு வரும் நிலையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப  நலத்துறை அறிவித்துள்ளதை பின்பற்றி சிவப்பு, ஆரஞ்ச் பச்சை மண்டலங்களை முடிவு செய்ய வேண்டும். இதற்காக சிவப்பு, ஆரஞ்ச் மற்றும் இடைப்பட்ட மண்டலங்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களே அடையாளப்படுத்தலாம். குறைந்தளவான தடைகளே நாடு முழுவதும் தற்போது அமலில் உள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : States ,Federal Ministry of Home Affairs , States, Federal Home Ministry, Corona, Curfew
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து