×

அரசு ஊழியர்களுக்காக 200 பஸ்கள் இயக்கம்

சென்னை: மாநகர் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தலைமைச் செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தங்களது பணிக்கு வந்துசெல்ல ஏதுவாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான திருவான்மியூர் பேருந்து நிலையம், கொட்டிவாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் தலைமைச் செயலகக் காலனி, பீட்டர்ஸ் காலனி, தாடண்டர் நகர், கிண்டி, கீழ்க்கட்டளை, நங்கநல்லூர், கே.கே.நகர், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம், தாம்பரம் கிழக்கு, மாதம்பாக்கம், பூவிருந்தவல்லி, அய்யப்பந்தாங்கல், வடபழனி, அண்ணா நகர் மேற்கு பணிமனை,

ஜெ.ஜெ.நகர் மேற்கு, திருமங்களம் அரசு அலுவலர் குடியிருப்பு,  செவ்வாப்பேட்டை, திருநின்றவூர், ஆவடி, பெரியார் நகர், பெரம்பூர் பேருந்து நிலையம், சூரப்பேட்டை, பாடியநல்லூர், மாதவரம் ஆசிஸ் நகர், கவிஞர் கண்ணதாசன் நகர், மீஞ்சூர், மாத்தூர் எம்.எம்.டி.ஏ.,  சிங்கப்பெருமாள்கோயில், மணலி, எண்ணூர், நெற்குன்றம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப்படுகின்றன.


Tags : servants , Government employees, buses motion
× RELATED தடய அறிவியல் துறையில்...