×

ஊரடங்கு நீடிக்கும் வரை அம்மா உணவகங்களில் அனைவருக்கும் கட்டணமின்றி உணவளிக்க வேண்டும்; டிடிவி தினகரன்

சென்னை: ஊரடங்கு 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மா உணவகங்களில் நேற்று வரை விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்த உணவுக்கு இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுவது சரியானதல்ல என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் ஏழை, எளிய மக்கள் இதனால் பசியால் வாடும் நிலை ஏற்படும். எனவே, ஊரடங்கு நீடிக்கும் வரை அம்மா உணவகங்களில் ஏழை மக்கள் அனைவருக்கும் கட்டணமின்றி உணவளிக்க வேண்டும். குறைந்தபட்சம் கொரோனாவின் பாதிப்பு குறையாத சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலாவது இதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்திட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : DTV Dinakaran , Curfew, Mother Restaurant, DTV Dinakaran
× RELATED முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட...